• Home
  • News
  • Mobiles News
  • Samsung Galaxy A13 5G அறிமுகத்திற்கு முன்பே அம்சங்கள் மற்றும் டிசைன் வெளியாகின

Samsung Galaxy A13 5G அறிமுகத்திற்கு முன்பே அம்சங்கள் மற்றும் டிசைன் வெளியாகின

MediaTek Dimensity 700 Soc சிப்செட், 50MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட Samsung-ன் புதிய Galaxy A13 5G ஸ்மார்ட்போன்.

Infinix Note 11 series Samsung A13 5G-ன் வெளிவந்த மாதிரி புகைப்படம். (Image Credits: LetsGoDigital/Twitter)

HIGHLIGHTS

  • Samsung-ன் A13 5G பற்றிய விவரங்கள் வெகு நாட்களாக இணையத்தில் கசிகிறது
  • மலிவான விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • இந்த ஸ்மார்ட்போன் பிங்கர்ப்ரின்ட் சென்சாரை பவர் பட்டனுடன் கொண்டிருக்கிறது
Tags:samsungleaksandroidmobiles news

அடுத்ததாக வெளியாக இருக்கும் Samsung-ன் A13 5G பற்றிய விவரங்கள் வெகு நாட்களாக இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கிறது. Samsung-ன் A சீரிஸ்-ன் தொடர்வரிசையான இந்த ஸ்மார்ட்போனானது, மலிவான விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் மலிவான 5G ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung A13 5G ஸ்மார்ட்போனானது 6.48-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்லே கொண்டுள்ளது என டிப்ஸ்டர் Antony ட்விட்டர் பதிவில் வெளியிட்டார். மேலும் அவர் வெளியிட்ட பதிவின் மூலம் Samsung A13 5G ஆனது MediaTek Dimensity 700 SoC சிப்செட், 50MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி என அம்சங்கள் கொண்டுள்ளது தெரியவருகிறது.

Infinix Note 11 series Samsung A13 5G-ன் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களை காட்டும் புகைப்படம். (Image Credits: Onleaks/Twitter)

வெளியான புகைப்படத்தை தெளிவாக கவனிக்கும் தருணம், இந்த ஸ்மார்ட்போனானது பிங்கர்ப்ரின்ட் சென்சாரை பவர் பட்டனுடன் கொண்டிருப்பது தெளிவாக தெரியவருகிறது. இத்தகைய தகவல்கள் அனைத்தும் நிலையில், இதனுடைய அறிமுக தேதி பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

Via

English Title: Samsung Galaxy A13 5G design and specifications leaked ahead of the launch

ADVERTISEMENT