• Home
  • News
  • Mobiles News
  • MediaTek Helio G95 SoC மற்றும் 6.43″ AMOLED டிஸ்ப்லேவுடன் Micromax IN Note 2, ஜனவரி 25-ம் தேதி அன்று வெளியாகிறது

MediaTek Helio G95 SoC மற்றும் 6.43″ AMOLED டிஸ்ப்லேவுடன் Micromax IN Note 2, ஜனவரி 25-ம் தேதி அன்று வெளியாகிறது

Samsung Galaxy S21-ன் வடிவமைப்பில் புதிய Micromax IN Note 2, அதே பின்புற கேமரா டிசைன்!

Micromax IN Note 2 Micromax IN Note 2 ஸ்மார்ட்போன் நாளை ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ளது. (Image Credits: Micromax/Twitter)

HIGHLIGHTS

  • Micromax IN Note 2 ஸ்மார்ட்போன் 6.43″ AMOLED டிஸ்ப்லே-வை கொண்டுள்ளது
  • Flipkart தளத்தில் Micromax IN Note 2-ன் ப்ரோமோ பேஜ் வெளியிடப்பட்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் பிரவுன் மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகும்
Tags:launchmicromaxandroidmobiles news

Micromax IN Note 1 ஸ்மார்ட்போனானது 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. தற்போது Micromax நிறுவனமானது In Note தரவரிசையில் அடுத்ததாக Micromax IN Note 2 ஸ்மார்ட்போனை, நாளை ஜனவரி 25-ம் தேதி வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களானது Micromax நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் தெரியவருகிறது.

மேலும் Flipkart தளத்தில் Micromax IN Note 2-ன் ப்ரோமோ பேஜ் ஆனது வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 6.43″ AMOLED டிஸ்ப்லே-வை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், பஞ்ச் ஹோல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. மேலும், பின்புறமாக 48MP கேமெரா-வுடன் மொத்தமாக நான்கு கேமெராக்களையும் கொண்டுள்ளது தெரியவருகிறது.

Micromax IN Note 2 Micromax IN Note 2 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது என்பதை உறுதி செய்யும் புகைபடம். (Image Credits: Micromax/Twitter)

MediaTek Helio G95 SoC சிப்செட்-ல் Android 11-ல் இயங்கும் Micromax IN Note 2, 4G நெட்வொர்க் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பவர் பட்டனுடன் சைடு பிங்கர்ப்ரின்ட் சென்சாரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரவுன் மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகும்.

இத்தகைய தகவல்கள் வெளியான டீசர் மற்றும் புகைப்படங்கள் மூலம் தெரியவருகிறது.

Source1|Source2

English Title: Micromax IN Note 2 will launch on 25th January with MediaTek Helio G95 SoC and 6.43″ AMOLED display

ADVERTISEMENT