• Home
  • News
  • Mobiles News
  • பிப்ரவரி நான்காம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Oppo Reno7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

பிப்ரவரி நான்காம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Oppo Reno7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

Oppo Reno7 மற்றும் Reno7 Pro வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என Oppo தரப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Oppo Reno7 Series Oppo Reno7 சீரிஸ் ஸ்மார்ட்போன், Flipkart மற்றும் அனைத்து ஆன்லைன்/ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்க கூடும். (Image Credits: Oppo India/Twitter)

HIGHLIGHTS

  • Oppo Reno7 5G மற்றும் Reno7 Pro 5G பிப்ரவரி நான்காம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும்
  • Oppo Reno7 SE ஸ்மார்ட்போனும் சில தினங்களில் இந்தியாவில் வெளியிடப்பட்டும்
  • Reno7 Pro 5G MediaTek Dimensity 1200 Max 5G செயலியை கொண்டுள்ளது
Tags:launchoppoandroidmobiles news

கடந்த வருடம் நவம்பர் 25-ம் தேதி அன்று Oppo நிறுவனம் Reno7 சீரிஸ்-ன், Reno7 5G, Reno7 Pro 5G, மற்றும் Reno7 SE 5G என மூன்று ஸ்மார்ட்போன்களையும் சீனாவில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவித்திருந்தபடி சீனாவில் விற்பனையையும் தொடங்கியது.

Oppo Reno7 சீரிஸ் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என வெளிவந்த தகவல்கள் பிற நாட்டு பயனர்கள் அனைவரையும் எதிர்பார்க்க வைத்தது. தற்போது Oppo Reno7 சீரிஸ்-ன் Reno7 5G மற்றும் Reno7 Pro 5G-ஐ இந்தியாவில் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக Oppo தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. Oppo Reno7 SE ஸ்மார்ட்போனும் சில தினங்களில் இந்தியாவில் வெளியிடப்பட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo Reno7 Series Oppo Reno7 5G மற்றும் Reno7 Pro 5G புகைபடம். (Image Credits: Oppo)

Oppo Reno7 5G

Oppo Reno7 5G ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் கொண்ட 90Hz AMOLED டிஸ்ப்லே, 32MP செல்பி கேமரா, மற்றும் 64MP+8MP+2MP என மூன்று பின்பக்க கேமெராக்களையும் கொண்டுள்ளது. Qualcomm Snapdragon 778G 5G செயலியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது Adreno 642L GPU-யுடன், 8GB/12GB ராம் மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்-ஐ கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4500mAh பேட்டரி கொண்ட Oppo Reno7 ஸ்மார்ட்போன் 60W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. மேலும் இன்-டிஸ்ப்லே பிங்கர்ப்ரின்ட் சென்சார், வை-பை, ப்ளூடூத், Face-unlock, NFC, என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Red Velvet, Dawn Gold, Starry Night Black மற்றும் Starry Wish என வண்ணங்களில் வருகிறது.

Oppo Reno7 Series (Image Credits: Oppo India/Twitter)

Oppo Reno7 Pro 5G

Oppo Reno7 Pro 5G ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் கொண்ட 90Hz AMOLED டிஸ்ப்லே, 32MP செல்பி கேமரா, மற்றும் 50MP பிரைமரி கேமெராவுடன் மூன்று பின்பக்க கேமெராக்களை கொண்டுள்ளது. MediaTek Dimensity 1200 Max 5G செயலியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது ARM G77 MC9 GPU-யுடன், 8GB/12GB ராம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்-ஐ கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4500mAh பேட்டரி கொண்ட Oppo Reno7 Pro ஸ்மார்ட்போன் 65W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. மேலும் இன்-டிஸ்ப்லே பிங்கர்ப்ரின்ட் சென்சார், வை-பை, ப்ளூடூத், Face-unlock, NFC, என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Dusk Snow Gold, Starry Night Black மற்றும் Starry Wish என வண்ணங்களில் வருகிறது.

Via|Source

English Title: Oppo Reno7 series to arrive India on 4th February, Officially announced

ADVERTISEMENT