• Home
  • News
  • Mobiles News
  • 6.43″ AMOLED டிஸ்ப்லே மற்றும் 30W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளியானது Micromax IN Note 2

6.43″ AMOLED டிஸ்ப்லே மற்றும் 30W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளியானது Micromax IN Note 2

Micromax IN Note 2 ஆரம்ப விலையாக ₹12,460-க்கு விற்பனை செய்யப்படும்.

Micromax IN Note 2 Micromax IN Note 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. (Image Credits: Micromax India)

HIGHLIGHTS

  • Micromax IN Note 2 ஆரம்ப விலையாக ₹12,460-க்கு விற்பனை செய்யப்படும்
  • ஜனவரி 30-ம் தேதி முதல் விற்பனை தொடங்கப்படும்
  • Micromax IN Note 2 16MP-ஐ கொண்ட செல்பி கேமெராவையும் கொண்டுள்ளது
Tags:micromaxfeaturedlaunchedmobiles news

Micromax நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று Micromax IN Note 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக வெளியான Micromax IN Note 2, ஆரம்ப விலையாக ₹12,460-க்கு விற்பனை செய்யப்படும்.

Flipkart மற்றும் அனைத்து ஆன்லைன்/ஆப்லைன் ஸ்டோரிகளிலும் ஜனவரி 30-ம் தேதி முதல் விற்பனை தொடங்கப்படும் என தகல்வல்கள் தெரியவருகின்றன. இந்த ஸ்மார்ட்போனானது Samsung Galaxy S21 சாயலில் உருவாக்கப்பட்டிருப்பது பார்த்தவுடனே தெரியும் வண்ணம் இருக்கிறது.

Micromax IN Note 2 Samsung Galaxy S21 மாதிரி காட்சியளிக்கும் Micromax IN Note 2. (Image Credits: Micromax India)

Micromax IN Note 2, 60Hz ரீஃப்ரஷ் ரேட் உடன் 6.43″ கொண்ட AMOLED FHD+ டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 48MP வைடு, 5MP அல்ட்ரா-வைடு, 2MP மேக்ரோ, மற்றும் 2MP டெப்த் சென்சார்களுடன் மொத்தமாக நான்கு பின்புற கேமெராக்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறமாக 16MP-ஐ கொண்ட செல்பி கேமெராவையும் கொண்டுள்ளது.

Micromax IN Note 2 Micromax IN Note 2 புகைபடம். (Image Credits: Micromax India)

ஸ்டாக் Android 11-ஐ கொண்ட Micromax IN Note 2, MediaTek Helio G95 SoC சிப்செட்-ல் இயங்குகிறது. 4GB ராம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்-ஐ கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது, மைக்ரோ SD கார்டு மூலம் அதிக ஸ்டோரேஜ் தரும் வசதியையும் கொண்டுள்ளது.

மேலும் 5000mAh பேட்டரியுடன் களத்தில் இருக்கும் Micromax IN Note 2, 30W பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Black மற்றும் Oak நிறங்களில் வெளியான இந்த ஸ்மார்ட்போனானது சைடு-மவுண்ட்டட் பிங்கர்ப்ரின்ட் சென்சார், வை-பை, ப்ளூடூத், Face-unlock என அனைத்து ஸ்மார்ட் வசதிகளையும் கொண்டுள்ளது.

Source

English Title: Micromax IN Note 2 is now official with 6.43″ AMOLED display and 5000mAh battery supports 30W fast charging

ADVERTISEMENT