• Home
  • News
  • Mobiles News
  • 5G நெட்வொர்க்கில் களம் இறங்கும் புதிய Realme 9 Pro மற்றும் 9 Pro Plus

5G நெட்வொர்க்கில் களம் இறங்கும் புதிய Realme 9 Pro மற்றும் 9 Pro Plus

Realme 9 Pro மற்றும் 9 Pro Plus ஸ்மார்ட்போன்கள் 5G நெட்வொர்க் ஆதரவுடன் வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Realme 9 Pro and Realme 9 Pro Plus Realme 9 Pro 5G நெட்வொர்க்குடன் வெளியாகும் என்பதை காட்டும் டீசர் புகைப்படம். (Image Credits: Realme/Twitter)

HIGHLIGHTS

  • Realme 9 Pro மற்றும் 9 Pro Plus 5G நெட்வொர்க்குடன் வெளியாகும்
  • Realme நிறுவனமானது இந்தியாவில் Realme 9 Pro-ஐ வெளியிட தயாராகும் நிலையில் இருக்கிறது
  • Realme 9 Pro பஞ்ச்-ஹோல் கொண்ட 16MP செல்பி கேமெராவை கொண்டுள்ளது
Tags:realmeleaksandroidmobiles news

Realme 8 மற்றும் Realme 8 Pro கடந்த வருடம், 2021 மார்ச் 24-ம் தேதி அன்று வெளியானது. Realme 8 சீரிஸ்-ல் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில், Realme 8 5G மற்றும் Realme 8S 5G-ஐ தவிர அனைத்தும் 4G நெட்வொர்க் சப்போர்ட்-ஐ மட்டுமே கொண்டிருந்தது. ஆனால், இதன் தரவரிசையில் தற்போது வெளியாக இருக்கும் Realme 9 Pro மற்றும் 9 Pro Plus ஸ்மார்ட்போன்கள், 5G நெட்வொர்க்குடன் வெளியாகும் என டீசர் மூலம் தெரியவருகிறது.

Realme நிறுவனமானது இந்தியாவில் Realme 9 Pro மற்றும் 9 Pro Plus ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராகும் நிலையில் இருப்பதாகவும், எனினும் வெளியீட்டு தேதியை இதுவரையிலும் அறிவிக்கவில்லை என்னும் தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

Realme 9 Pro and Realme 9 Pro Plus Realme 9 Pro Plus ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 920 சிப்செட்டில் இயங்கும் என்பதை உறுதி செய்யும் புகைப்படம். (Image Credits: Realme/Twitter)

Realme 9 Pro Rumored Specifications:

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, Realme 9 Pro ஸ்மார்ட்போன் 120Hz சப்போர்டுடன் 6.59″ கொண்ட FHD+ AMOLED டிஸ்ப்லே கொண்டிருப்பதாக தெரியவருகிறது. மேலும், 64MP பிரைமரி வைடு கேமராவுடன் 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார்-ஐ கொண்டு, மொத்தமாக மூன்று கேமெராக்களை கொண்டுள்ளது தெரியவருகிறது.

முன்பக்கமாக, பஞ்ச்-ஹோல் கொண்ட 16MP செல்பி கேமெரா கொண்டிருக்கும் எனவும் தெரியவருகிறது. செயலியாக Qualcomm Snapdragon 695 SoC-ஐ கொண்ட Realme 9 Pro, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh கொண்ட பேட்டரி-ஐ கொண்டிருக்கும் எனவும் கசிந்த தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

Realme 9 Pro and Realme 9 Pro Plus Realme 9 Pro Plus மாதிரி புகைப்படம். (Image Credits: @OnLeaks x @Smartprix/Twitter)

Realme 9 Pro Plus Rumored Specifications:

மறுபுறமாக, Realme 9 Pro Plus ஸ்மார்ட்போன் 6.43″ FHD+ AMOLED, 90Hz டிஸ்ப்லே கொண்டிருப்பதாகவும், 50MP பிரைமரி வைடு கேமராவுடன் 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார்-ஐ கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

முன்பக்கமாக, Realme 9 Pro-ஐ போலவே பஞ்ச்-ஹோல் கொண்ட 16MP செல்பி கேமெராவை கொண்டுள்ளது. MediaTek Dimensity 920 சிப்செட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனானது, 65W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4500mAh கொண்ட பேட்டரி-ஐ கொண்டிருப்பதாய் தெரியவருகிறது. விரிவான அம்சங்கள் ஏதும் இதுவரையிலும் வெளிவரவில்லை.

Realme 9 Pro Key Specs (rumored):

  • Display:6.59″, FHD+ AMOLED
  • Processsor and GPU:Qualcomm Snapdragon 695 SoC
  • Front Camera:16MP selfie camera
  • Rear Camera:64MP(wide)+8MP(ultrawide)+2MP(macro)
  • Battery:5000mAh, 33W fast Charging

Realme 9 Pro Plus Key Specs (rumored):

  • Display:6.43″, FHD+ AMOLED
  • Processsor and GPU:MediaTek Dimensity 920
  • Front Camera:16MP selfie camera
  • Rear Camera:50MP(wide)+8MP(ultrawide)+2MP(macro)
  • Battery:4500mAh, 33W fast Charging
Source

English Title: Realme 9 Pro and 9 Pro Plus will come with 5G network support, officially announced

ADVERTISEMENT