• Home
  • News
  • Mobiles News
  • Infinix Note 11 சீரிஸ் வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும், Infinix தரப்பில் தகவல் வெளியானது

Infinix Note 11 சீரிஸ் வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும், Infinix தரப்பில் தகவல் வெளியானது

அயல் நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட Infinix Note 11 சீரிஸ் இந்தியாவிலும் வருகின்ற டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

Infinix Note 11 series (Image Credits: Infinix/Screenshot from official website)

HIGHLIGHTS

  • Infinix Note 11 சீரிஸ் இந்தியாவில் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை
  • டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் INBook X1 laptop உடன் இந்த ஸ்மார்ட்போனானது வெளியிடப்படும்
  • இதில் 120Hz டிஸ்ப்லே கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது
Tags:announcementinfinixofficialmobiles news

கடந்த அக்டோபர் 14 அன்று Infinix தரப்பில், Note 11 சீரிஸ் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அசத்தலான 6.95″ 120Hz டிஸ்ப்லே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அதிகாரபூர்வமாக இந்தியாவில் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. தற்போது Infinix நிறுவனமானது வருகின்ற டிசம்பர் மாதத்தில் Note 11 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Infinix தரப்பில் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் INBook X1 laptop உடன் இந்த ஸ்மார்ட்போனானது வெளியிடப்படும். MediaTek Helio G96 சிப்செட் மற்றும் Mali-G57 MC2 GPU-வில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் தன் தகுதிக்கு ஏற்ற செயல்திறனை கொண்டுள்ளது. தனது முந்தய Note 10 சீரிஸ்-ல் 90Hz டிஸ்ப்லே இருக்கும்பட்சத்தில், இதில் 120Hz கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியத்தக்கது.

Infinix Note 11 series (Image Credits: Infinix/Screenshot from official website)

இந்த ஸ்மார்ட்போனானது 64MP+13MP+2MP பின்பக்க கேமெராவையும், 16MP முன்புற கேமெராவையும் கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி கொண்ட Infinix Note 11 Pro ஸ்மார்ட்போன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Mithril Grey, Haze Green, Mist Blue என மூன்று வண்ணங்களை கொண்ட Infinix Note 11 Pro, ஏறத்தாழ ₹15,000-க்கு இந்தியாவில் விற்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Infinix Note 11 Pro அம்சங்கள்:

  • Display:6.95", 120Hz, IPS LCD
  • OS:Android 11, XOS 8
  • Processsor and GPU:Mediatek Helio G96, Mali-G57 MC2
  • RAM and Storage:8GB/128GB
  • Front Camera:16MP selfie camera, 1080p - 30fps
  • Rear Camera:64MP (wide), f/1.7, 0.8µm + 13MP (ultrawide), f/2.5, 1.12µm + 2MP (depth), f/2.4
  • Battery:5000mAh, 33W Fast Charging
  • Color:Mithril Grey, Haze Green, Mist Blue
Via

English Title: Infinix Note 11 series will launch in India on December

ADVERTISEMENT