• Home
  • News
  • Mobiles News
  • Redmi Note 10-ல் 108MP கேமரா மற்றும் 120Hz டிஸ்ப்லே, Xiaomi தரப்பிலிருந்து தகவல் வெளியானது

Redmi Note 10-ல் 108MP கேமரா மற்றும் 120Hz டிஸ்ப்லே, Xiaomi தரப்பிலிருந்து தகவல் வெளியானது

வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி அன்று Redmi Note 10 வெளியாக இருப்பதை தொடர்ந்து, டீசர் மற்றும் பல தகவல்கள் இணையத்தளத்தில் வலம் வருகின்றன.

Xiaomi Redmi Note 10 இந்த ஸ்மார்ட்போனானது 48MP பிரைமரி சென்சாருடன் பின்புறமாக நான்கு கேமெராக்களை கொண்டு வெளிவர இருக்கிறது. (Image Credits: @RedmiIndia/Twitter)

HIGHLIGHTS

  • Redmi Note 10 108MP கேமராவை கொண்டு வருகிறது
  • ஸ்னாப்ட்ராகன் 732G SoC சிப்செட்டில், Redmi Note 10 இயங்கக்கூடும்
  • இது ஒரு சிறந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்
Tags:xiaomiannouncementandroidmobiles news

Redmi Note 10 சீரிஸ் ஸ்மார்ட்போன், வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ்-ல், Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max என மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றதாகவும், இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒரே நாளில் வெளியிடப்படும் எனவும் தெரியவருகிறது. இந்த ஸ்மார்ட்போனிகளில் 5G நெட்வர்க் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரையிலும் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில், பிரீமியம் ப்ளாக்க்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மட்டும் தான் 108MP இருப்பதை பார்த்திருபோம். ஆனால் Redmi Note 10, ஒரு பட்ஜெட் ப்ளாக்க்ஷிப்பாக 108MP கேமராவை கொண்டு வருவது, இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட்டாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48MP பிரைமரி சென்சாருடன் பின்புறமாக நான்கு கேமெராக்களை கொண்டும், முன்புறமாக ஒரு செல்பி கேமெராவை கொண்டும், வெளிவர இருக்கிறது.

Redmi இந்தியா-வின் CEO Manu Kumar Jain அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், Redmi Note 10-ல் 120Hz டிஸ்ப்லே இருப்பது உறுதி செய்யப்பட்டது. 120Hz ரீபிரஷ் ரேட் சப்போர்ட் இருப்பதனால் இது AMOLED டிஸ்ப்லேயாக இருக்கலாம், எனினும் இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தற்போது வெளியான Redmi Note 10-ன் புகைப்படங்கிளில் பின்புறமாக பிங்கர்ப்ரின்ட் சென்சார் இல்லாததால், இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்ரின்ட்டானது பவர் பட்டன் அல்லது இன்-டிஸ்ப்லேவில் இருக்கலாம் என தெரியவருகிறது.அதிகாரபூர்வமாக வெளியிடப்பட முன்பே, இந்த ஸ்மார்ட்போன் ரீடைல் பாக்ஸ் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் இதனுடைய ஹண்ட்ன்ஸ்-ஆன் விடியோவும் வெளியானது.

ஸ்னாப்ட்ராகன் 732G SoC சிப்செட்டில், Redmi Note 10 இயங்கக்கூடும் எனவும், இந்த ஸ்மார்ட்போனானது MIUI 12 அன்ராய்டு 11-ல் செயல்படும் எனவும், ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. Redmi Note 10 பற்றிய வெளியான இந்த தகவல்கள் மூலம், இது ஒரு சிறந்த பட்ஜெட் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என தெரிகிறது.

Source1|Source2|Via

English Title: Redmi Note 10 features 108MP rear camera setup and 120Hz display, confirmed via teaser

ADVERTISEMENT