• Home
  • News
  • Mobiles News
  • OnePlus Nord CE 2 5G-ன் வெளியீட்டு தேதி இணையத்தில் லீக், பிப்ரவரி 11 வெளியாகும் என தகவல்

OnePlus Nord CE 2 5G-ன் வெளியீட்டு தேதி இணையத்தில் லீக், பிப்ரவரி 11 வெளியாகும் என தகவல்

பிரபல லீக்ஸ்டர் ஒருவர் OnePlus Nord CE 2 5G பிப்ரவரி 11 வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

OnePlus Nord CE 2 5G OnePlus Nord CE 2 5G கேமரா மாடியூல் மாதிரி புகைப்படம். (Image Credits: OnePlus/Twitter)

HIGHLIGHTS

  • OnePlus Nord CE 2 5G அறிமுக தேதியானது தெரியவந்துள்ளது
  • OnePlus Nord CE 2 5G விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது
  • கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் விற்கப்படலாம் எனவும் தெரியவருகிறது
Tags:oneplusrumorsandroidmobiles news

ஏற்கனவே OnePlus Nord CE 2 5G பற்றிய வதந்திகள் இணையத்தில் கசிந்தவண்ணம் இருக்கும் நிலையில், தற்போது இதனுடைய அறிமுக தேதியானது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ட்விட்டர் பதிவு ஒன்றில் வருகின்ற பிப்ரவரி மாதம் OnePlus நிறுவனம் OnePlus Nord CE 2 5G-ஐ அறிமுகம் செய்வதாய் லீக்ஸ்டெர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது, பிரபல லீக்ஸ்டரான Max Jambor பிப்ரவரி 11-ம் தேதி OnePlus Nord CE 2 5G வெளிவருவதாய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது வெளியான புகைப்படத்தை ஏற்கனவே வெளிவந்த மாதிரி புகைப்படங்களுடன் ஒப்பிடும்போது, கேமரா மாடியூல் ஓத்து இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனானது விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

OnePlus Nord CE 2 5G OnePlus Nord CE 2 5G புகைப்படம். (Image Credits: @HeyitsYogesh x @91mobiles/Twitter)

OnePlus Nord CE 2 5G Rumored Specifications:

OnePlus Nord CE 2 5G-ல் 90Hz சப்போர்ட் கொண்ட 6.4″ FHD+ AMOLED டிஸ்ப்லே இருப்பதாகவும், பின்புறமாக 64MP+8MP+2MP கொண்ட ட்ரிபிள் கேமெரா செட்டப் இருப்பதாகவும், மற்றும் முன்புறமாக 16MP செல்பி கேமெரா இருப்பதாகவும், இணையத்தில் கசிந்த அம்சங்கள் மூலம் தெரியவருகிறது.

MediaTek Dimensity 900 சிப்செட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனானது, Android 12-ன் மேல் OxygenOS 12-ல் இயங்குவதாய் தெரியவருகிறது. 65W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 4500mAh பேட்டரி-ஐ கொண்டிருக்கும் OnePlus Nord CE 2 5G, கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் ₹24000 முதல் விற்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.

OnePlus Nord 2 CE Key Specs (rumored):

  • Display:6.4", FHD+ AMOLED
  • OS:Android 12, OxygenOS 12
  • Processsor and GPU:MediaTek Dimensity 900, Mali-G68 MC4
  • RAM and Storage:8GB/12GB RAM, 128GB/256GB Storage
  • Front Camera:16MP selfie camera
  • Rear Camera:64MP(wide)+8MP(ultrawide)+2MP(macro)
  • Battery:4500mAh, 65W fast Charging
Source

English Title: OnePlus Nord CE 2 5G launch date revealed, expected to launch on February 11

ADVERTISEMENT