• Home
  • News
  • Mobiles News
  • 6.55 Inches/120Hz டிஸ்ப்லே, 65W பாஸ்ட் சார்ஜிங் உடன் Oneplus 9, விவரங்கள் லீக்

6.55 Inches/120Hz டிஸ்ப்லே, 65W பாஸ்ட் சார்ஜிங் உடன் Oneplus 9, விவரங்கள் லீக்

புதிய கேமரா மாடுலேயுடன் Oneplus 9, ஸ்னாப்ட்ரகன் 888 SoC-ல் இயங்கும் இது, மற்ற பிளாக்சிப் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக போட்டியிடுமா?

Oneplus 9 புதிய கேமரா டிசைனுடன் Oneplus 9 ஸ்மார்ட்போன். (Image Credits: @Dave2D/Twitter,Youtube)

HIGHLIGHTS

  • LTPO என்னும் லேட்டஸ்ட் பேனல் மூலம் டிஸ்பிலே பில்ட் செய்ய பட்டிருக்கிறது
  • Oneplus 9 ஆனது ஸ்னாப்ட்ராகன் 888 Soc சிப்செட்-ல் செயல்படும்
  • மார்ச் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது
Tags:leaksoneplusfeaturedmobiles news

Oneplus 9-ன் சில அம்சங்கள், AIDA64 ஆண்ட்ராய்டு ஆப்-ன் ஸ்க்ரீன்ஷாட் மூலம் Techdroider வழியாக ட்விட்டரில் வெளியானது. Oneplus 9 சீரிஸ் என்பதில், Oneplus 9, Oneplus 9 Pro, மற்றும் Oneplus Lite ஆகிய மூன்று வகையான ஸ்மார்ட்போன்களும் உள்ளடங்கும். இந்த ஸ்மார்ட்போனில், LTPO என்னும் லேட்டஸ்ட் பேனல் மூலம் டிஸ்பிலே பில்ட் செய்ய பட்டிருக்கிறது என தகவல்கள் வெளிவந்தன.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் Apple iPhone 13, LTPO பேனல் கொண்ட டிஸ்ப்லேயில் தான் வெளியிடப்படும் என தகவல்கள் இணையதளத்தில் பரவிவருகிறது. Oneplus 9 ஆனது ஸ்னாப்ட்ராகன் 888 Soc சிப்செட்-ல் செயல்படும் என AIDA64 வழியாக வெளிவந்த ஸ்க்ரீன்ஷாட் மூலம் தெரியவருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது வருகின்ற மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம்.

Oneplus 9 இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 11-ன் மேல் Oxygen OS மூலம் இயங்கக்கூடும். (Image Credits: @onleaks/Voice)

இதில் 65W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 45W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதுடன், 4500mAh கொண்ட பேட்டரி பொருத்த பட்டிருக்கிறது. மேலும், 6.55 inches Full HD+ உடன், 120Hz ரீபிரஷ் ரேட் கொண்ட டிஸ்ப்லே-வில் Oneplus 9 வெளிவரலாம். முன்னதாக வெளிவந்த Oneplus ஸ்மார்ட்போன்கள் போன்று, இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 11-ன் மேல் Oxygen OS மூலம் இயங்கக்கூடும்.

Oneplus 9-ன் தெரியவந்துள்ள இந்த விவரங்களின் மூலம், இது தற்போதைய பிளாக்சிப் ஸ்மார்ட்போன்களுக்கு ஈடான போட்டியாளராக இருக்கலாம் என தெரிகிறது. இத்தகைய விவரங்கள் அனைத்தும் இணையதளங்கள் மூலம் தெரியவந்தன. மேலும், இந்த ஸ்மார்ட்போனானது மார்ச் மாதத்தில் வெளியிடபட இருப்பதால் இதனுடைய டீஸர் மற்றும் அறிவிப்புகளை Oneplus கம்பெனி தரப்பிலிருந்து வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.

Source

English Title: Oneplus 9 may comes with 6.5 inches/120Hz display and 65W fast charging, specifications leaks

ADVERTISEMENT