Xiaomi Redmi Note 11 அதே அம்சங்களுடன் Redmi Note 11T 5G-ஆக இந்தியாவில் வெளியிடப்படலாம்
Xiaomi Redmi Note 11 ஸ்மார்ட்போன் Redmi Note 11T 5G என இந்தியாவிலும், POCO M4 Pro 5G என உலகளாவிலும் அறிமுகமாகலாம் என பதிவுகள் மூலம் தெரியவருகிறது.

Xiaomi Redmi Note 11 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சில தினங்களே ஆகி, அடுத்த கட்டமாக பிற நாடுகளிலும் அறிமுகமாக தயாராகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் MIUI டிப்ஸ்டரான Kacper Skrzypek வெளியிட்ட தகவலில், Xiaomi Redmi Note 11 ஆனது Redmi Note 11T 5G என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Heh, here we go again... ;p#RedmiNote11 in China = #RedmiNote11T5G in India. "evergreen" is RN11 for Global = #POCOM4Pro5G. pic.twitter.com/TkHTdeWDVy
— Kacper Skrzypek 🇵🇱 (@kacskrz) November 1, 2021
Redmi Note 11, Redmi Note 11 Pro, மற்றும் Redmi Note 11 Pro+ என மூன்று ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியானதை தொடர்ந்து, Redmi Note 11 ஆனது Redmi Note 11T 5G-ஆக இந்தியாவில் அறிமுகமாயின் மற்ற இரண்டு வேரியண்ட்கழும் எவ்வாறு வெளியாகும் என்பதை பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

மேலும் Kacper Skrzypek வெளியிட்ட புகைப்படத்தில் காட்டப்படும் ஸ்ட்ரிங்ஸ் ஆனது, Redmi Note 11 உலகளாவில் POCO M4 Pro 5G-ஆக வெளியிடப்படலாம் என்பதை தெளிவாய் தெரிவிக்க்கிறது. இவ்வாறான தகவல்கள் எல்லாம் வெளிவந்தும், அதிகாரபூர்வமாக Xiaomi தரப்பிலிருந்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
SourceEnglish Title: Xiaomi Redmi Note 11 may launch in India as Redmi note 11T 5G with similar specifications