வருகிறது புதிய அம்சங்களுடன் MIUI 13, அடிதூள் அப்டேட்டில் Xiaomi
MIUI விருப்பதாரர்கள் மிகவும் விரும்பும் வகையில் அதிரடி அப்டேட்டுடன் MIUI 13 வெகுவிரைவில் வெளியிடப்படும்.

தற்போது MIUI-ன் அதிகபட்ச அப்டேட்டாக MIUI 12.5 இருந்து வரும் நிலையில், புதிதாக MIUI 13 ஆனது வெளியிட போவதாய் Xiaomi-ன் CEO தெரிவித்துள்ளார். MIUI-ல் பல வசதிகளை கண்கவரும் வகையில் கொடுக்கப்பட்டிருப்பது அனைத்து Xiaomi பயனர்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைகிறது. புதிதாக வெளியிடப்பட்ட Xiaomi-ன் மிட்-ரேஞ் முதல் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் MIUI 13 அப்டேட் தரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி ஆப்டிமைசேஷன், நோட்டிபிகேஷன் பார் என மொத்த UI-ம் புதுப்பித்து, புதிய வித அனுபவத்தை MIUI 13 ஆனது தரும் என சம்மந்தப்பட்ட பதிவுகள் தெரிவிக்கின்றன. புதிதாக Always-on டிஸ்ப்லே-ல் அதிகமான அனிமேட் தீம் (Animated theme) இருக்கிறது தெரியவருகிறது. மேலும் அனைவரும் எதிர்பார்க்கும் Virtual RAM எனப்படும் அம்சமும் UI உடன் வருவது மிகவும் சுவாரசியம் தரும் வண்ணம் இருக்கிறது.
MIUI 13-ல் கொடுக்கப்பட்டிருக்கும் Virtual RAM அம்சம் மூலம் 3GB RAM வரைக்கும் இன்பில்ட் ஸ்டோரேஜ்-ல் நீட்டிக்க முடியும். MIUI 13 முதலில் சீனாவிலும், அதனை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ViaEnglish Title: Xiaomi to release MIUI 13 soon with more updated features