• Home
  • News
  • Mobiles News
  • இரண்டாவதாக பின்புறம் ஒரு சிறிய டிஸ்ப்லே உடன் மிக பெரிய கேமரா செட்டப், Xiaomi Mi 11 Ultra லீக்

இரண்டாவதாக பின்புறம் ஒரு சிறிய டிஸ்ப்லே உடன் மிக பெரிய கேமரா செட்டப், Xiaomi Mi 11 Ultra லீக்

Xiaomi Mi 11-ன் நல்ல ஒரு அப்டேட் ஆக இருக்குமா Mi 11 ultra? அசத்தலான செகண்டரி டிஸ்ப்லேவுடன் கொண்ட கேமரா.

Xiaomi Mi 11 Ultra Mi 11 Ultra-ல் ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வலது பக்கத்தில் செகண்டரி டிஸ்ப்லே பொருத்த பட்டுள்ளது. (Image Credits: TECH BUFF PH/Youtube)

HIGHLIGHTS

  • ஸ்னாப்ட்ராகன் 888 சிப் இதில் பொருத்த பட்டிருக்கிறது
  • பஞ்ச் ஹோல் கட்டவுட் உடன் 20MP கொண்ட செல்பி கேமரா, மேல்-இடதுபுறமாக அமைந்துள்ளது
  • இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி இருக்கிறது
Tags:xiaomileaksandroidmobiles news

Xiami Mi 11 Ultra ஸ்மார்ட்போன் BIS செர்டிபிகேஷன் பெற்று இருந்ததை தொடர்ந்து, சில அம்சங்களும் ஏற்கனவே வெளிவந்தன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது பல Xiaomi ரசிகர்கள் இடையே பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாரா விதமாக யூடூபில் Mi 11 Ultra-இன் ஹன்ட்ஸ் ஆன் வீடியோ வெளிவந்தது.

இதன் மூலமாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் வெளிவந்தன. வீடியோ வெளி வந்த சிறுது நேரத்திலேயே, சில காரணத்தினால் வீடியோ பிரைவேட் செய்யப்பட்டது. நாம் அனைவரும் எதிர்பார்த்த ஸ்னாப்ட்ராகன் 888 சிப் இதில் பொருத்த பட்டிருக்கிறது. மேலும், புதிதாக அட்டகாசமான ஒரு செகண்டரி டிஸ்பிலே இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கம் கேமரா பக்கத்தில் கொடுக்க பட்டிருக்கிறது.

Xiaomi Mi 11 Ultra கேமெராவானது பெரிஸ்கோப் லென்ஸ் வசதியுடன் 120X ஜூம் வரைக்கும் சப்போர்ட் செய்யும். (Image Credits: TECH BUFF PH/Youtube)

பின்புற கேமரா Poco M3-போல் மிக பெரிய பம்ப், 50MP + 48MP + 48MP கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வலது பக்கத்தில் செகண்டரி டிஸ்ப்லே பொருத்த பட்டுள்ளது. Mi 11 Ultra-ன் இந்த கேமராவுடன் பின் பக்க தோற்றம், பிரீமியம் லூக்குடன் அட்டகாசமாக இருக்கிறது. கேமெராவானது பெரிஸ்கோப் லென்ஸ் வசதியுடன் 120X ஜூம் வரைக்கும் சப்போர்ட் செய்யும் என தெரிகிறது.

முன்புறமாக பஞ்ச் ஹோல் கட்டவுட் உடன் 20MP கொண்ட செல்பி கேமரா, மேல்-இடதுபுறமாக அமைந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனானது 6.81 inches இன்ச்ஸ், WQHD+ OLED டிஸ்பிலே உடன் 120Hz ரெப்பிரேஷ் ரேட் வரைக்கும் சப்போர்ட் செய்யும் என தெரிய வந்துள்ளது. Xiaomi Mi 11 Ultra-வில் OLED டிஸ்ப்லே இருப்பதனால், ஃபின்கர்ப்ரின்ட் சென்சார் கண்டிப்பாக இன்-டிஸ்பிலே ஆகத்தான் இருக்கும்.

இதில் 67W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவேர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளன. தற்போது வெளியாகிய இந்த தகவல்களின் அடிப்படையில், Mi 11 Ultara Xiaomi-ன் நல்ல ஒரு அப்டேட் ஆக இருக்கிறது.

அதிகாரபூர்வமாக Xiaomi தரப்பில் இருந்து Mi 11 Ultra பற்றிய தகவல்கல் வெளியாகாத நிலையில், தற்போது இந்த தகவல்கள் வெளியான சூழ்நிலையால், நாம் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அப்டேட்யை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

Xiaomi Mi 11 Ultra முக்கிய அம்சங்கள்:

  • Display:6.8″, WQHD+ OLED
  • OS:Android 11, MIUI 12.5
  • Processsor and GPU:Qualcomm Snapdragon 888
  • Front Camera:20MP selfie camera
  • Rear Camera:50MP + 48MP + 48MP
  • Battery:5000mAh, 67W Fast Charging
Source|Via

English Title: Xiaomi Mi 11 Ultra leaks, having a bigger camera bump on the back with a secondary display

ADVERTISEMENT