• Home
  • News
  • Mobiles News
  • EEC மற்றும் BIS சான்றிதழ்களில் Xiaomi 12, விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

EEC மற்றும் BIS சான்றிதழ்களில் Xiaomi 12, விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

Xiaomi 12 BIS சான்றிதழில் பட்டியலிடப்பட்டிருந்ததை தொடர்ந்து EEC சான்றிதழிலும் தற்போது காணப்பட்டது.

Xiaomi 12 (Image Credits: TheGalox_/Twitter)

HIGHLIGHTS

  • Xiaomi 12 கடந்த வாரம் BIS சான்றிதழ் பெறப்பட்டது
  • Xiaomi 12 Snapdragon 898 சிப்செட்-ஐ கொண்டிருப்பது தெரிய வருகிறது
  • Xiaomi 12 சான்றிதழ்களில் காணப்பட்டதால் வெகுவிரைவில் வெளியிடப்படும்
Tags:xiaomirumorsfeaturedmobiles news

2201122G என்ற மாடல் எண்ணான ஸ்மார்ட்போன், Xiaomi 12 கடந்த வாரம் BIS சான்றிதழ் பெறப்பட்ட தகவலை அறிந்திருப்போம். தற்போது 2201122G மற்றும் 2201123G என்ற எண்களை கொண்ட ஸ்மாட்போனானது EEC சான்றிதழிலும் காணப்பட்டது. இது Xiaomi 12 மற்றும் Xiaomi 12 Pro என நம்பப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட சான்றிதழ்களில் காணப்பட்ட Xiaomi 12, Qualcomm Snapdragon 898 சிப்செட்-ஐ கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதுவரையிலும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், Snapdragon 898 இச்சான்றிதழில் காணப்பட்டது வியக்க வைக்கிறது. Qualcomm Snapdragon 898 சிப்செட் இந்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 12 (Image Credits: Gadgetsdata/Twitter)

இதுவரையிலும் வெளியான தகவல்களில், Xiaomi 12 ஆனது 120Hz AMOLED டிஸ்ப்லே, 50MP பிரைமரி கேமரா, Android 12 (MIUI), 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ், 120W பாஸ்ட் சார்ஜிங் என சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது தெரியவருகிறது. Xiaomi 12 சான்றிதழ்களில் காணப்பட்டதால் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source|Via

English Title: Xiaomi 12 appears on EEC and BIS certification with Qualcomm Snapdragon 898

ADVERTISEMENT