• Home
  • News
  • Mobiles News
  • MediaTek Helio A22 சிப்செட், 64MP பிரைமரி கேமரா-வுடன் புதிய Vivo V23e, வெளியான அம்சங்கள்

MediaTek Helio A22 சிப்செட், 64MP பிரைமரி கேமரா-வுடன் புதிய Vivo V23e, வெளியான அம்சங்கள்

Vivo-ல் வெளியாக இருக்கும் V23e, MediaTek Helio A22 கொண்டு இருப்பதாய் இணையத்தில் கசிந்த தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

Vivo V23e ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நகல் புகைப்படம். (Image Credits: @chunvn8888/Twitter)

HIGHLIGHTS

  • V23e நவம்பர் மாதத்தில் வியட்நாம்-ல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின
  • Vivo V23e-ன் அன்பாக்ஸிங் விடியோ யூடியூபில் வெளியானது
  • Vivo V23e இந்தியாவில் தோராயமாக ₹34,000-க்கு விற்கப்படும்
Tags:vivorumorsfeaturedmobiles news

Vivo-ல் புதிதாக வெளியாக இருக்கும் V23e ஸ்மார்ட்போனின் அம்சங்களானது, Geekbench மூலம் வெளியானது. Vivo V23e நவம்பர் மாதத்தில் வியட்நாம்(Vietnam)-ல் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனானது Geekbench-ல் தோன்றியது, விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதியளிக்கிறது.

மேலும் Vivo V23e-ன் அன்பாக்ஸிங் விடியோவை யூடியூபில் அறியாத நபர் ஒருவர் அப்லோட் செய்து, பின்பு நீக்கப்பட்டது. இதனை Chun என்ற டிப்ஸ்டர் கண்டு, வெளியான வீடியோவின் நகலினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இவர் வெளியிட்ட நகல் புகைப்படத்தில் V23e-ன் முன்புறமாக வாட்டர்-ட்ராப் கேமரா நாட்ச் மற்றும், கிளாஸ் பேக் டிசைன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Vivo V23e Vivo V23e Geekbench புகைப்படம். (Image Credits: Geekbench)

Vivo V23e-ஆனது MediaTek Helio A22 சிப்செட் மற்றும் Android 11-ன் மேல் Funtouch OS 12-ல் இயங்கும் என வெளியான அம்சங்கள் மூலம் தெரியவருகிறது. கேமெராவானது, முன்புறமாராக 50MP மற்றும் 64MP+8MP+2MP என மூன்று சென்சார்கள் இருப்பதாக தெரியவருகிறது. Vivo V23e இந்தியாவில் தோராயமாக ₹34,000-க்கு விற்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

Vivo V23e வெளியான அம்சங்கள்:

  • Display:AMOLED
  • OS:Android 11, Funtouch OS 12
  • Processsor and GPU:MediaTek Helio A22
  • RAM and Storage:8GB/128GB
  • Front Camera:50MP selfie camera
  • Rear Camera:64MP (wide) + 13MP (ultrawide) + 2MP (depth)
  • Battery:4030mAh, 44W Fast Charging
Source

English Title: Vivo V23e comes with MediaTek Helio A22 processor and 64MP primary camera, specifications leaks

ADVERTISEMENT