• Home
  • News
  • Mobiles News
  • 6.5-இன்ச் டிஸ்ப்லே, 48MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Motorola Moto E30 அறிமுகம்

6.5-இன்ச் டிஸ்ப்லே, 48MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Motorola Moto E30 அறிமுகம்

Moto E சீரிஸ்-ல் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக புதிய Moto E30 அறிமுகப்படுத்தப்பட்டது.

Motorola Moto E30 (Image Credits: Motorola/Official website)

HIGHLIGHTS

  • Moto E20 மற்றும் Moto E40 ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது
  • 2GB ராம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட்-ஐ கொண்டுள்ளது
  • Moto E30 ஸ்மார்ட்போன் 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங் உடன் வருகிறது
Tags:launchedmotorolaandroidmobiles news

Motorola-வின் Moto E சீரிஸ் ஆன Moto E20 மற்றும் Moto E40 ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்ததாக தற்போது Moto E30-ம் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் Moto E-சீரிஸ், தற்போது அறிமுகமான Moto E30 உள்பட அனைத்தும் UNISOC சிப்செட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Motorola Moto E30 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் கொண்ட 90Hz IPS LCD டிஸ்ப்லே, 8MP செல்பி கேமரா, மற்றும் 48MP+2MP+2MP என மூன்று பின்பக்க கேமெராக்களையும் கொண்டுள்ளது. Unisoc T700 செயலியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது Mali G52 GPU-யுடன், 2GB ராம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட்-ஐ கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Motorola Moto E30 (Image Credits: Motorola/Official website)

5000mAh பேட்டரி கொண்ட Moto E30 ஸ்மார்ட்போன் 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங் உடன் வருகிறது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக இந்த ஸ்மார்ட்போனானது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார், Micro SD card சப்போர்ட், வை-பை, Face-unlock, IP52 rating, என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Mineral Gray, Digital Blue என இரு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English Title: Motorola announced Moto E30 with 6.5 inches display, 48MP primary camera and 5000mAh battery

ADVERTISEMENT