• Home
  • News
  • Mobiles News
  • Lava Agni 5G வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி அன்று MediaTek Dimensity 810 SoC-வுடன் வெளியிடப்படும்

Lava Agni 5G வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி அன்று MediaTek Dimensity 810 SoC-வுடன் வெளியிடப்படும்

Lava Agni 5G ஸ்மார்ட்போன் நவம்பர் 9-ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என Lava தரப்பிலிருந்து உறுதியானது.

Lava Agni 5G (Image Credits: Lava/Official website)

HIGHLIGHTS

  • Lava-வின் வரலாற்றில் முதல் 5G ஸ்மார்ட்போன் Lava Agni 5G
  • Lava 5G-ல் ஸ்மார்ட்போன் வெளியிடப்போவது மிகவும் வரவேற்புக்குரியது
  • 5000mAh பேட்டரி கொண்ட Lava Agni 5G-ல் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கக்கூடும்
Tags:rumorslavaandroidmobiles news

Lava-வின் வரலாற்றில் முதல் 5G ஸ்மார்ட்போனாக வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி அன்று Lava Agni 5G இந்தியாவில் வெளியிடப்படும் என Lava அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இதுவரையிலும் A, Z, மற்றும் X சீரிஸ்-ல் கவனம் செலுத்திய Lava, தற்போது புதிய பெயரில் அதுவும் 5G-ல் ஸ்மார்ட்போன் வெளியிடப்போவது மிகவும் வரவேற்புக்குரியது.

கடந்த வாரத்தில் Lava தனது வெப்சைட்டையில் Lava Agni 5G பற்றிய விவரக்குறிப்பு பட்டியலை வெளியிட்டு இருந்தது. 6.51-இன்ச் 90Hz டிஸ்ப்லே கொண்ட Lava Agni 5G ஆனது Android 11 OS-ஐ கொண்டு MediaTek Dimensity 810 SoC சிப்செட்டில் இயங்குகிறது. மேலும் 64MP பிரைமரி கேமராவுடன் மூன்று பின்புற கேமரா இருப்பது வெளியான பட்டியல் மற்றும் புகைப்படம் மூலம் தெரியவருகிறது.

Lava AGNI 5G (Image Credits: Lava/Official website)

5000mAh பேட்டரி கொண்ட Lava Agni 5G-ல் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வை-பை, பேஸ்-அன்லாக், பிங்கர்ப்ரின்ட் சென்சார், பிளூடூத், என அனைத்து ஸ்மார்ட் வசதிகளும் Lava Agni 5G கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் Lava Agni 5G தோரமாயாக ₹20,000 உள்ளே விற்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Via

English Title: Lava Agni 5G will launch with MediaTek Dimensity 810 SoC chipset on November 9

ADVERTISEMENT