iQOO U5 சீரிஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிகின்றன
iQOO U5 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரியவருகிறது.

iQOO Z5 சீரிஸ் வெளிவந்து ஒரு மாதங்களே ஆன நிலையில், தற்போது iQOO-ன் அடுத்த சீரிஸ் iQOO U5 வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மிட்-ரேஞ் ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் எனவும், தற்போது வெளிவந்துள்ள Xiaomi Redmi Note 11 சீரிஸ்-ன் போட்டியாளராக இருக்கலாம் எனவும், பல பதிவுகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த ஒரு தகவலில் iQOO U5 சீரிஸ் MediaTek Dimensity 810 சிப்செட்-ல் இயங்கலாம் என தெரியவருகிறது. அதிகாரபூர்வமாக iQOO தரப்பில் iQOO U5 பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரையிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரு 5G ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ViaEnglish Title: iQOO U5 series to launch before the end of the year, rumors says