• Home
  • News
  • Mobiles News
  • iQOO தரப்பில் Snapdragon சிப்செட்டில் இரு ஸ்மார்ட்போன்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்

iQOO தரப்பில் Snapdragon சிப்செட்டில் இரு ஸ்மார்ட்போன்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்

iQOO தரப்பில், Neo 5s மற்றும் Neo6 SE ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரியவருகின்றன.

iQOO Neo 5s and iQOO Neo6 SE (Image Credits: iQOO/Official website)

HIGHLIGHTS

  • iQOO Neo 5s மற்றும் iQOO Neo6 SE வெகுவிரைவில் வெளியிடப்படும்
  • ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மற்றும் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை
  • பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்ட 5000mAh பேட்டரி-யை கொண்டுள்ளது
Tags:iqoorumorsandroidmobiles news

iQOO Neo 5s மற்றும் iQOO Neo6 SE ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருப்பதாய் ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தன. தற்போது வெளியான அம்சங்களும் முன்னாள் வெளியான அம்சங்களும் ஓரளவு ஒத்து இருப்பதால், இவ்விரு ஸ்மார்ட்போனானது வெகுவிரைவில் வெளியிடப்படும் என்பதை உறுதி அழிக்கிறது.

டிப்ஸ்டர் DigitalChatStation இத்தகவல்களை வெளியிட்ட பதிவில், ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மற்றும் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் ஒருசில தளங்களில் வெளியான தகவல்கள் மூலம் ஸ்மார்ட்போனின் பெயரினை உறுதிப்படுத்த முடிகிறது. iQOO Neo 5s மற்றும் iQOO Neo6 SE பற்றிய தெளிவான அம்சங்கள் வெளிவந்துள்ளதை விரிவாக கீழ் காண்போம்.

iQOO Neo 5s and iQOO Neo6 SE (Image Credits: DigitalChatStation/Twitter)

iQOO Neo 5s ஆனது Qualcomm Snapdragon 888 சிப்செட் மற்றும் Adreno 660 GPU-ல் செயல்படும் எனவும், 120Hz கொண்ட 6.56-இன்ச் OLED டிஸ்ப்லே பொருத்தப்பட்டுள்ளது எனவும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 48MP-ஐ பிரைமரி கேமெராவாக கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்ட 5000mAh பேட்டரி-யை கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

அடுத்ததாக iQOO Neo 6 SE ஆனது Qualcomm Snapdragon 778G அல்லது Snapdragon 778G Plus சிப்செட்-ஐ செயலியாக கொடுள்ளது என்பதும் தெரியவருகிறது. iQOO Neo 5s போலவே இதிலும் 66W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்ட 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. iQOO Neo 6 SE பற்றிய விரிவான வேறு எந்த தகவல்களும் தெரியவரவில்லை.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களானது வெகுவிரைவில் வெளியிடப்படலாம் என தெரியவருகிறது.

Via

English Title: Two iQOO smartphones having Snapdragon processor will launch soon

ADVERTISEMENT