• Home
  • News
  • Mobiles News
  • 6.95-இன்ச் 120Hz டிஸ்ப்லே, 50MP ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகமானது Infinix Note 11s, சிறப்பான அம்சங்கள்!

6.95-இன்ச் 120Hz டிஸ்ப்லே, 50MP ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகமானது Infinix Note 11s, சிறப்பான அம்சங்கள்!

Infinix Note 11 சீரிஸ்-ல், ஏற்கனவே Note 11 Pro அறிமுகமானதை தொடர்ந்து Note 11s-ம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Infinix Note 11s (Image Credits: Infinix/Official website)

HIGHLIGHTS

  • Infinix Note 11 Pro கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது
  • ராம், ஸ்டோரேஜ்-ஐ தவிர எந்த வேறுபாடும் இருப்பதாய் தெரியவில்லை
  • 3GB Virtual RAM அம்சத்தை கொண்ட Note 11s, Android 11-ன் மேல் XOS 10-ல் செயல்படுகிறது
Tags:infinixlaunchedandroidmobiles news

Infinix Note 11 சீரிஸ்-ல் Pro வேரியண்ட்டான Note 11 Pro கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து Infinix Note 11 வேரியண்ட் ஆனது அவர்களது வெப்சைட்-ல் பட்டியலிடப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாய் தகவல்கள் தெரியவந்தன. தற்போது Infinix தரப்பில் Note 11s ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது அறிமுகமான Infinix Note 11s-ஐ Note 11 Pro-யுடன் ஒப்பிடும் போது, கேமரா, ராம், மற்றும் ஸ்டோரேஜ்-ஐ தவிர வேறு எந்த வேறுபாடும் இருப்பதாய் தெரியவில்லை. 120Hz ரீப்ரஷ் ரேட் கொண்ட 6.95-இன்ச் டிஸ்ப்லே இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பான அம்சம் ஆகும்.

Infinix Note 11s (Image Credits: Infinix/Official website)

Infinix Note 11s-ல் பின்புறமாக 50MP+2MP+2MP ட்ரிபிள் கேமரா, மற்றும் 16MP செல்பி கேமெரா பொருத்தப்பட்டிருக்கிறது. MediaTek Helio G96 சிப்செட்-ஐ கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது, 4GB / 6GB / 8GB RAM மற்றும் 64GB / 128GB என வேரியண்ட்களில் வருகிறது. 3GB Virtual RAM அம்சத்தை கொண்ட Note 11s, Android 11-ன் மேல் XOS 10-ல் செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி கொண்ட Infinix Note 11s-ல் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கிறது. மேலும் 4G நெட்வர்க், வை-பை, பேஸ்-அன்லாக், பிங்கர்ப்ரின்ட் சென்சார், பிளூடூத், என அனைத்து வசதிகளும் Note 11s கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலையானது தோரமாயாக ₹16,000-ற்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Infinix Note 11s அம்சங்கள்:

  • Display:6.95 inches, IPS LCD, 120Hz
  • OS:Android 11, XOS 10
  • Processsor and GPU:MediaTek Helio G96
  • RAM and Storage:4GB/6GB/8GB, 64GB/128GB
  • Front Camera:16MP selfie camera
  • Rear Camera:50MP (wide) + 2MP (macro) + 2MP (depth)
  • Battery:5000mAh, 33W Fast Charging
  • Color:Haze Green, Mithril Gray, Symphony Cyan
Via

English Title: Infinix Note 11s goes official with 6.95 inches 120Hz display and 50MP triple rear camera

ADVERTISEMENT